தஞ்சை பெரிய கோவில்
குறிப்புச் சட்டகம் முன்னுரை தஞ்சைப் பெரிய கோவிலைக் கட்டியவர் வேறு பெயர்கள் தலவரலாறு தஞ்சைப் பெரிய கோவிலின் சிறப்புக்கள் முடிவுரை முன்னுரை : இந்திய நாட்டிலே சிறப்புமிகு கோவில்களுக்குப் பஞ்சம் இல்லை என்று கூறும் வகையில் பல கோவில்கள் காணப்படுகின்றன. அவ்வகையில் தஞ்சைப் பெருவுடையார் கோவிலும் ஒன்றாகும். இந்த கோவிலானது தஞ்சாவூரிலுள்ள சோழநாட்டுக் காவிரி ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ளது. இது இந்தியாவிற்கு மட்டுமன்றி உலக பாரம்பரியச் சின்னமும் ஆகும். இந்திய நாட்டின் மிகப் பெரிய கோவில்களில் தஒன்றான பல சிறப்புக்களை தன்னகத்தே கொண்ட தஞ்சைப் பெருங்கோவில் பற்றி இக்கட்டுரையில் காண்போம். தஞ்சைப் பெரிய கோவிலைக் கட்டியவர்: சோழப் பேரரசின் புகழ்பெற்ற மன்னர்களுள் ஒருவரான முதலாம் ராஜராஜசோழன் என்றழைக்கப்பட்ட சோழ மன்னன் சோழர்களின் சிறப்பின் சின்னமாக விளங்கும் தஞ்சை பெருவுடையார் கோவிலை கட்டுவித்தார். கி.பி 985 முதல் கி.பி 1014 வரை ஆட்சி செய்த இம்மன்னன் ராஜகேசரி வர்மன், மும்முடிச் சோழன் என்ற பெயர்களாலும் அழைக்கப்படுகின்றார். காஞ்சியில் ராஜசிம்மனால் கட்டப்பட்ட கைலாயநாதர் கோவில் ராஜராஜனை மிகவும் கவரவே அதனை போல...